தூத்துக்குடியில் நடந்த போலீஸ் உடல்தகுதி தேர்வில் 835 பேர் தேர்ச்சி
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழு நடத்திய 2–ம் நிலை ஆண், பெண் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டன்களுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1,486 ஆண் விண்ணப்பதாரர்களுக்கும், 613 பெண் விண்ணப்பதாரர்களுக்கும் உடல் தகுதித்தேர்வு கடந்த 3–ந்தேதி முதல் நேற்று வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடந்தது.
இந்த தகுதி தேர்வு நெல்லை போலீஸ் கமிஷனர் மகேந்தர்குமார் ரத்தோடு, நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் நடந்தது.
இதில் 1,486 ஆண் விண்ணப்பதாரர்களில் 385 பேர் தேர்வுக்கு வரவில்லை. 1,101 பேர் மட்டும் வந்தனர். இதில் 662 பேர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் 613 பெண் விண்ணப்பதாரர்களில் 353 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொண்டனர். அதில் 173 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தகுதி தேர்வில் ஆண் விண்ணப்பதாரர்களில் 662 பேரும், பெண் விண்ணப்பதாரர்களில் 173 பேரும் என மொத்தம் 835 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.

Reviewed by thoothukudibazaar
on
21:31
Rating:
Reviewed by thoothukudibazaar
on
21:31
Rating:

No comments: